இளைய தளபதி விஜய்-இன் அடுத்த ஆட்டம் அதிரவிருப்பது நம்ம ப்ரியங்கா சோப்ராவுடன்

விஜய் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடித்துக் கொண்டே சிம்புதேவன் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிரார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை மாதம் துவங்குகிறது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் கதாநாயகியை தீவிரமாகத் தேடி வந்தனர். புதுமுகமாக இல்லாமல் முன்னணி நடிகையாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர்.

விஜய்க்கு ஜோடியாக நடிக்க இந்தி நடிகை தீபிகா படுகோனே -யிடம் கேட்டபோது அவர் கேட்ட சம்பளம் சம்பந்தப்பட்டவர்களை அதிர வைத்துள்ளது.

எனவே பாலிவுட்டின் டாப் நடிகையான ப்ரியங்கா சோப்ரா மீண்டும் இளைய தளபதி விஜயுடன் ஜோடியாகிறார். இளைய தளபதி விஜய் அவர்கள்தான் ப்ரியங்கா சோப்ரா-வை முதன் முதலில் சினிமா உலகில் அறிமுகப்படுத்தியவர் என்பது குறிப்பிடத்த்க்கது.

இந்நிலையில் நடிகை பிரியங்கா சோப்ரா குண்டே இந்தி படத்தில் தன்னுடன் நடித்த ரன்வீர் சிங் மற்றும் அர்ஜுன் கபூர் ஆகியோருடன் காமெடி நைட்ஸ் வித் கபில் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவருக்கு காலில் காயம் ஏற்பட்டிருந்து தெரிய வந்தது.

எனவே கதாநாயகி மீண்டும் மாற்றப்படுவாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது...

Related News :
VLcCpuHKCZI
Failures will give experience - Actor Vijay
VLcCpuHKCZI Cheran advice to Actor Vijay and Actor Ajith's Fans Through FB
VLcCpuHKCZI
Vijay's Jilla Ajith's Veeram are successful because there is no tamil heroine's Radharavi
VLcCpuHKCZI
Actor Vijay is happy for the success of Ajith's Veeram