மீண்டும் நயன்தாரா மார்க்கெட் கிர்ர்ர்... போட்டி போடும் சிம்பு - ஜெயம்ரவி - தனுஷ்

தனது அடுத்த ஆட்டத்தில் யாருமே எதிர்பாராத அளவுக்கு நயன்தாராவின் மார்க்கெட் கிர்ரென எகிறி நிற்கிறது. காரணம் நயன்தாராவுடன் டூயட் பாடுவதில் இள-நடிகர்கள் ஆர்வம் காட்டுவதே இந்த வளர்ச்சிக்கு காரணம். அதோடு இல்லாமல், சிம்புவும் நயன்தாராவின் மார்க்கெட் மறுபடியும் எகிறி நிற்க காரணமாகி விட்டார்.

அஜீத்துடன் ஆரம்பம் படத்தில் நடித்து விட்டு ஆர்யாவுடன் ராஜா ராணியில் நடித்தபோது கூட நயன்தாரா மீது இந்த அளவுக்கு கிரேஸ் ஏற்படவில்லை.

இன்னும் சில படங்களில் நடிப்பார் அதோடு காணாமல் போய் விடுவார் என்றுதான் நினைத்தனர்.
அனாமிகாவில் நடித்த நயன்தாரா, அடுத்தபடியாக உதயநிதியுடன் இது கதிர்வேலன் காதல் படத்தில் கமிட்டானார்.
நயன்தாராவை விட்டு விலகி நின்ற அவரது மாஜி காதலரான சிம்புவே அதை எதையும் பொருட்படுத்தாமல் மீண்டும் நயன்தாராவை தனது படத்துக்கு ஒப்பந்தம் செய்தபோதுதான் நயன்தாராவின் மார்க்கெட் மறுபடியும் சூடு பிடிக்கத் தொடங்கியது.
ஜெயம்ரவியும் தனது அண்ணன் தன்னை வைத்து இயக்கும் படத்திற்கு நயன்தாராவை ஒப்பந்தம் செய்யச்சொன்னார்.
இப்போது தனுசும் தனது புதிய படத்தில் நயன்தாராவுடன் டூயட் பாடுகிறார்.
இதனால், இப்போது படத்துக்குப்படம் நயன்தாராவின் படக்கூலி எகிறிக்கொண்டே செல்வதோடு, மறுபடியும் No-1 நடிகையாகியிருக்கிறார்.

Related News :
VLcCpuHKCZI
வாழு படத்தில் தாறுமாறாக வந்துள்ள தாறுமாறு பாடல்
VLcCpuHKCZI Actor Dhanush sings for his father
VLcCpuHKCZI
இளைய தளபதி விஜய்-இன் அடுத்த ஆட்டம் அதிரவிருப்பது நம்ம ப்ரியங்கா சோப்ராவுடன்
VLcCpuHKCZI
தோல் கொடுப்பான் தம்பி -Selvaragavan - Thanush

No comments: