செல்வராகவன் பிரமாண்டமான பட்ஜெட்டில் இயக்கிய படம் இரண்டாம் உலகம். இந்த படம் ஆர்யா நடித்த படங்களின் வியாபாரங்களை விடவும் பன்மடங்கு அதிகமாக தயாரிக்கப்பட்டது, ஆனபோதும் எனக்கு இருக்கிற வியாபாரத்தை வைத்து போட்ட காசை விட பல கோடிகளை அதிகமாக சம்பாதித்து லாபக்கணக்கு காட்டுகிறேன் என்று சொடக் போட்டு படாதிபதியை பணத்தை வாரி இறைக்க வைத்தார் செல்வராகவன்.
இதற்கிடையே, ஒரு கட்டத்தில் படத்தின் லாப நஷ்டத்தில் இருவருக்கும் பங்கு என்றும் ஒரு உடன்படிக்கையை அப்படத்தை தயாரித்த பிவிபி நிறுவனத்துடன் செய்து கொண்டார் செல்வராகவன். இதனால் அவரது விருப்பம் போலவே படத்தின் பட்ஜெட் எகிறிக்கொண்டே போனது. ஆனால், படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை.
இதனால் செய்து கொண்ட உடன்படிக்கைபடி தனது பங்குக்கு தனது ஒரு வீட்டை விற்று கொடுத்தாராம் செல்வராகவன். ஆனபோதும் கணக்கு பைசல் ஆகவில்லையாம். அதையடுத்து, இப்போது அந்த நிறுவனத்தின் படமொன்றில் தனது தம்பி நடிக்க வைப்பதற்கு கால்சீட் வாங்கிக்கொடுத்து கணக்கு சமன் பண்ணியிருக்கிறார் செல்வராகவன்.
தற்போது தமிழில் 3 படங்கள், இந்தியில் ஒரு படம் என பிசியாக இருக்கும் தனுசும், அண்ணனின் சூழ்நிலையை புரிந்து கொண்டு பிவிபி நிறுவனத்தின் படமொன்றில் நடிக்கிறாராம். தக்க சமயத்தில் கைகொடுத்து அண்ணனை காப்பாற்றியிருக்கிறார் தம்பி தனுஷ்.
Related News :

No comments:
Post a Comment